×

வியாபாரியின் குழந்தைகளை தாக்கிய போதை வாலிபர் கைது

திருச்சி, ஏப். 12: திருச்சி அம்மா மண்டபம் குஜிலியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி தமிழரசி(42). இருவரும் ரங்கம் ராஜகோபுரம் அருகே பழ வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மகன், மகளை வீட்டில் விட்டு விட்டு இருவரும் பழ வியாபாரத்துக்கு சென்றுவிட்டனர். அப்போது தமிழரசி வீட்டின் அருகே நின்று கொண்டு அதே பகுதியை சேர்ந்த குமரவேல்(24) என்பவர் போதையில் ஆபாசமாக பேச்சால் சத்தம் போட்டு கொண்டிருந்தார். ஏன் இங்கு சத்தம் போடுகிறீர்கள் என்று தமிழரசியின் மகன், மகள் கேட்டுள்ளனர். இதனால் 2 பேரையும் குமரவேல் தாக்கினார். இது குறித்து ரங்கம் போலீசில் தமிழரசி அளித்த புகாரின் பேரில் குமரவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED திருச்சியில் இன்று மின்தடை