×

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இருந்து டெல்லி, மும்பை ஐதராபாத்துக்கு விமான சேவை ரத்து சுங்கச்சாவடி பணியாளர்கள் மே 20 முதல் வேலைநிறுத்தம்

திருச்சி, ஏப். 12: திருச்சியில் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். பின்னர் அவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அளித்த பேட்டி: தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தில் சுங்கம் வசூலிக்கும் பணிகளில் 10 முதல் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களையும் பணி வரன்முறைப்படுத்தி பணி பாதுகாப்பும், ஊதிய நிர்ணயமும் செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பலன்களும், பாதுகாப்பும், 480 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக தொடர் பணியில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் துணை ஒப்பந்ததாரர்களை நியமிப்பது, அவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிப்பது, தொழிலாளர்களை ஆண்டுதோறும் ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவது, ஆண்டுதோறும் வேலைக்கோரி புதிய விண்ணப்பங்கள் அளிக்குமாறு சட்டவிரோதமாக நிர்ப்பந்தப்படுத்துவதை கண்டிக்கிறோம். நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுப்பதற்கு மே 15ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் ஆணையம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் மே 20ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Trichy ,Delhi ,Mumbai ,Hyderabad ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவியதைப்போல...