பிளஸ் 2 செய்முறை தேர்வு 16ம் தேதி தொடங்குகிறது

சேலம், ஏப். 12:சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. வரும் 16ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 322 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 38,254 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களில், செய்முறை பாடங்கள் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மட்டும், கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வரும் 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், சேலம், சேலம் ஊரகம், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு, கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விளக்கம் அளிக்கப்படும். மேலும், செய்முறைத் தேர்வுகளை மேற்பார்வையிடும் புறத்தேர்வாளர்கள் பட்டியலும் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: