×

ஸ்டிராங் ரூமை பார்வையிட அனுமதி


கெங்கவல்லி, ஏப்.12: ஆத்தூர், கெங்கவல்லி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும், ஜெய் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்டிராங் அறைக்கு முன்பு துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ராமன் ஆய்வுக்காக வந்தபோது, ஸ்ட்ராங் அறைக்கு தினந்தோறும் வேட்பாளர் மற்றும் முகவர்களை அனுமதிப்பதில்லை என திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக நேற்று, ஆத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறைக்கு ஆத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் துரை, உதவி அலுவலர்கள் வரதராஜன், தமிழரசி உள்ளிட்டோர் தலைமையில் திமுக வேட்பாளர் சின்னதுரை, அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன், அதிமுக முகவர் மோகன், வேட்பாளர் மாதேஸ்வரி உள்ளிட்டோர் சீல் வைக்கப்பட்ட அறையை பார்வையிட்டனர். தொடர்ந்து ஸ்டிராங் அறையை பார்வையிட அனுமதியளிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Strong Room ,
× RELATED கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்...