மாதேஸ்வரன் கோயிலில் மகா தேரோட்டம் ரத்து

மேட்டூர், ஏப்.12: தமிழக-கர்நாடக எல்லையில் மேட்டூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் கோயிலில் பங்குனி மாத மகா தேரோட்ட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் செயலாளர் ஜெய விபவ சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மலை மாதேஸ்வரன் கோயிலில் 10.4.21ம் தேதி முதல் 13.4.21ம் தேதி வரை யுகாதி திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு ஆணைப்படி 500 பக்தர்களுக்கு மட்டுமே கோயில் வளாகத்தில் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தேரோட்டத்தின்போது 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளதால் மகா தேரோட்ட உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், வழக்கமான பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளிலும் எந்தவித மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: