×

குளித்தலையில் கொரோனா விழிப்புணர்வு முககவசம் அணிந்து சிறுவர், சிறுமிகள் சிலம்பாட்ட பயிற்சி

குளித்தலை, ஏப்.12: குளித்தலையில் கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் சிலம்பாட்ட பயிற்சி பெறும் சிறுவர், சிறுமிகள் முககவசம் அணிந்து கொண்டு சிலம்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனோ தாக்குதல் இரண்டாவது அலை வீசுவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் தளர்த்தி ஊரடங்கு பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டு கிடந்ததால் சிறுவர், சிறுமியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் தங்களுடைய நேரத்தை வீணாக கழித்து வந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலையில் பஞ்சபூத சர்வதேச தற்காப்பு கலைக்கழகம் சார்பில் சிலம்பாட்ட பயிற்சியினை பயிற்சியாளர் கதிரேசன் அளித்து வருகிறார்.

இதனால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் சிலம்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து பயிற்சியாளர் கதிரேசன் கூறியதாவது: கொரோனா காலத்தில் மாணவர்கள் தங்களுடைய நேரத்தை பல்வேறு திசைகளில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதனால் ஒருநிலைப்படுத்தும் வகையில் மூளை வளர்ச்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் ஏற்றவகையில் இப்பயிற்சி முக்கியமாக கருதப்படுவதால் பெற்றோர்கள் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் சேர்த்துவிட்டு குழந்தைகள் எதிர்கால வாழ்விற்கு நல் வழிகாட்டுதலை செய்து வருகின்றனர். மேலும் தற்போது தமிழக அரசு கொரோனா இரண்டாவது அலை வீசுவது குறித்து அதனை தடுப்பதற்கான சில கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

அதில் பொது இடங்களி–்ல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் முக கவசம் அணிந்து வந்து பயிற்சி பெற்று செல்லவேண்டும் தெரிவித்துள்ளேன். அதன்பேரில் தினந்தோறும் முக கவசம் அணிய வேண்டும். சிலம்பாட்டம் முடிந்தவுடன் முறையான கைகளை சுத்தப்படுத்திய பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு கூறி வருகிறோம். இதனால் பெற்றோர்கள் இந்த பயிற்சி மையத்திற்கு ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர் என தெரிவித்தார்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்