நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் 200 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல், ஏப்.12: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 200 பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்கள் 200பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தது. முகாமில், நகராட்சியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஊசி போடப்பட்டு அதற்கு அடுத்து அவர்கள் அரை மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.

Related Stories: