அம்மன் குளத்தில் தூய்மை பணி

திருச்செங்கோடு, ஏப்.12: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அம்மன் குளம், மக்களின் நீராதாரமாக விளங்கி வருகிறது. மேலும், அம்மன் குளத்தை சுற்றி கற்களால் கரைகள் அமைத்து, நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த நடைபாதை முட்புதர்களால் சூழப்பட்டு காணப்படுகிறது. பொதுமக்களும் குப்பைகளை கரையோரத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் அம்மன் குளத்தை சுற்றிலும், ஒரே குப்பை கூளமாக காணப்படுகிறது. இந்த குளத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காக  கொண்டு வர, சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன. மேலும், குளக்கரையில் இருந்த முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த தூய்மைப்பணி சில வாரங்கள் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: