கொரோனா பரவல் எதிரொலி முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2,656பேர் மீது வழக்கு

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டம் முழுவதும் முகக்கவசம், சமூகஇடைவெளி, தலைகவசம் அணியாமல் வந்த 2,656 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்பாட் பைன் வசூலித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை பரவல் தீவிரமாகி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடு அமல்படுத்தியதால், மாவட்டம் முழுவதும் போலீசார், ஊரகத்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிரமாக வாகன சோதனை நடத்தி, வழக்குப்பதிவு மற்றும் ஸ்பாட் பைன் போட்டனர். நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை, ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 721 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்பாட் பைன் வசூலித்தனர்.

அதேபோல், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் 244 பேர், டூவீலரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் 1,491பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்றும் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மொத்தம் 2,656 வழக்குப்பதிவு செய்து போலீசார் ஸ்பாட் பைன் வசூலித்துள்ளனர். தர்மபுரி போலீஸ் டிஎஸ்பி உட்கோட்டத்தில், தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டியதாக 363 வழக்கும், முகக்கவசம் அணியாமல் வந்த 215பேர் மீதும், சமுக இடைவெளி கடைபிடிக்காமல் வந்த 58பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், அரூர் உட்கோட்டத்தில் 479 பேர் தலைகவசம், 134 பேர் முககவசம், 68 பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பென்னாகரம் உட்கோட்டத்தில் 372பேர் தலைகவசம் அணியாமலும், 243 பேர் முககவசம் அணியாமல் வந்ததிற்கும், 34பேர் சமுக இடைவெளி கடைபிடிக்காமல் நடந்து கொண்டதாலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்பாட் பைன் வசூலித்துள்ளனர். பாலக்கோடு உட்கோட்டத்தில் தலைக்கவசம் அணியாத 277பேர், முகக்கவசம் அணியாமல் வந்த 129 பேர், 34 பேர் சமுக இடைவெளி கடைபிடிக்காமல் நடந்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தர்மபுரி போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சின்னசாமி தலைமையில் எஸ்ஐகள் ஞானதி, மாது மற்றும் போக்குவரத்து போலீசார் பேருந்துகளில் ஏறி, பஸ் பயணிகள் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிந்துள்ளார்களா என பஸ்சில் ஏறி சோதனை நடத்தினர். நேற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories: