தர்மபுரி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 76 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி சீதாராமன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜீவானந்தம், மாவட்ட நீதிபதி ராஜா, சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் கலைவாணி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் வழக்குதாரர்கள் பங்கேற்றனர். தீர்வு காணக்கூடிய வழக்குகள், விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சமரச தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் 76 வழக்குகளுக்கு ₹1 கோடியே 23 லட்சத்து 19 ஆயிரத்து 450க்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டது. இதேபோல், குடும்ப நல வழக்குகள் தொடர்பான விசாரணையில், பிரிந்திருந்த 2 தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்.

Related Stories: