கண்டாச்சிபுரம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் ராணுவ வீரர், மகள் பரிதாப பலி க

ண்டாச்சிபுரம், ஏப். 12: கார்-லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராணுவ வீரர், அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சக்தி சிவபாலகண்ணன்(32). ராணுவ வீரரான இவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு நர்மதா(28) என்ற மனைவியும், ஜனனி(9) என்ற மகளும், பிரனவ்குமார்(4) என்ற மகனும் உள்ளனர். விழுப்புரத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு நேற்று முன்தினம் தனது காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், கெடார் அடுத்த மங்களம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. அந்த பகுதியில் வளைவு சாலை இருந்ததாலும், சாலையில் பெரிய பள்ளம் இருந்ததாலும், வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார் மீது மோதியுள்ளது. இதில் காரின் வலது பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. காரை ஓட்டி வந்த ராணுவ வீரர் சக்தி சிவபாலகண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி ஜனனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். மேலும் நர்மதா மற்றும் பிரனவ்குமார் ஆகியோர் மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: