திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதி: சிறப்பு அர்ச்சனை, அபிஷேகங்களுக்கு தடை

திருப்போரூர், ஏப்.12 : செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கொரோனா கிருமி நாசினி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபல கோயில்களில் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று பக்தர்களின் வருகையின்போது அவர்கள் முககவசம் அணிந்து உள்ளனரா என்று பார்த்து அனுமதிக்கப்பட்டனர். மேலும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கோயிலுக்குள் வருவதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படும் பக்தர்களின் கைகளில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதன் பிறகு, பக்தர்கள் மூலவரை தூரத்தில் இருந்து தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அர்ச்சகர்களும், சிவாச்சாரியார்களும் பக்தர்களின் நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் போன்றவற்றை நேரடியாக இடக்கூடாது என்றும் அவற்றை சிறு பேப்பர்களில் மடித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் உட்கார வைத்து அன்னதானம் போடுவதற்கு பதிலாக இடைவெளிவிட்டு நின்றவாறு தட்டுகளில் உணவு வழங்கப்பட்டது.

Related Stories: