கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி மெத்தனம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், ஏப் .12 : காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரக்கப கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை புறநகரை ஒட்டிய காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் பரவிய கொரோனா மெல்ல காஞ்சிபுரம் மாவட்டம் முழுமையையும் ஆட்டிப்படைத்தது. தொடர்ந்து நவம்பர் மாத வாக்கில் மெல்ல குறையத் தொடங்கிய கொரோனாவின் தீவிரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளியில் வரும்போது, பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும், அடிக்கடி கைகழுவுவதுடன், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பை பேரிடர் காலம் என்பதை உணராமல் வழக்கமான பணியாக நினைத்து ஏனோதானோ என்று செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் காந்தி சாலை, பூக்கடைசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் முகக் கவசம் அணியாமல் செல்கின்றனர். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், கிருமி நாசினி தெளித்தல், கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்யாமல், டூவீலரில் செல்பவர்களை மடக்கி அபராதம் செலுத்துவதில் மட்டும் நகராட்சி நிர்வாகம் குறியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: