பேருந்து நிலையம், நிறுத்தங்களில் பயணிகள் அதிகளவில் கூடி நிற்பதை தவிர்க்க உடனுக்குடன் பேருந்தில் அனுப்ப வேண்டும்: ஊழியர்களுக்கு எம்டிசி நிர்வாகம் உத்தரவு

சென்னை, ஏப்.12: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது முக்கிய பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களில் பயணிகள் அதிக  எண்ணிக்கையில் கூடி நிற்பதை தவிர்க்கும் வகையில், உடனுக்குடன் அவர்களை  பேருந்துகளில் ஏற்றி அனுப்பிடவும், தேவை இருக்கும்  வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் ஊழியர்களுக்கு எம்டிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், ‘மாநகர் போக்குவரத்துக்கழகம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி உள்ளிட்ட இயக்க பகுதிகளில் பொதுமக்கள் பயண தேவைகளை நிறைவேற்ற ஏதுவாக நாள்தோறும் பேருந்துகளை இயக்கி வருகிறது. எனினும் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி கொரோனா பெருந்தொற்று அதிகரித்ததை ெதாடர்ந்து அரசு குறிப்பிட்ட நிலையான இயக்க நெறிமுறைகளின்படி ெகாரோனா பெருந்தொற்று பரவலை பயணிகளிடையே தடுக்கும் விதமாக பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க அறிவுறுத்தியது. தற்போது மீண்டும் கொரோனா பெருந்தொற்று சென்னையில் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அரசு மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிகள் இருக்கை எண்ணிக்கைக்கேற்ப அமர்ந்து பயணிக்கவும், பயணிகள் பேருந்தினுள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கிய நிலையான இயக்க நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கிட அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்

ளது. எனவே, மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர் மற்றும் நேரக்காப்பாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் கூடி நிற்பதை தவிர்க்கும் வகையில், உடனுக்குடன் அவர்களை சம்மந்தப்பட்ட வழித்தட பேருந்துகளில் ஏற்றி அனுப்பிடவும், தேவை இருக்கும் வழித்தடத்தில் கடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிவதை உறுதி செய்யவும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் நெரிசல் நேரங்களில் பணியில் இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: