தொழிற்சலைகளில் பணிபுரிபவர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்

திருவள்ளூர், ஏப். 12: ஆவடி, திண் ஊர்தி தொழிற்சாலை மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பாக, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் முகாமினை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர் . அப்போது அவர்கள் கூறியதாவது : மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி, கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் திருவள்ளுர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்பொழுது வரை 1430 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களில் தனிமைப்பட்டுள்ளார்

கள். மாவட்டத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 4500 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது. 68 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இப்பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. ஆவடி திண் ஊர்தி தொழிற்சலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 5300 நபர்கள் மற்றும் அதில் குறிப்பாக 45 வயதை கடந்த 2193 நபர்களில் 667 நபர்களுக்கு தேர்தல் பணிகளின் போது  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் 8000 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இன்று நடைபெற்ற முகாமில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இடப்பட்டது. எனவே, பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைகளுக்கு  முழு ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில் நோய்தடுப்பு இணை இயக்குநர் வினய்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், பிரபாகர்  மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: