மார்க்கெட், உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கும்

ஊட்டி,ஏப்.10: ஊட்டியில் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகள் வழக்கம் போல் இயங்கும். நேரம் குறைக்கப்படமாட்டாது என கலெக்டர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு துவங்கியது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், உழவர் சந்தை போன்றவைகள் துவக்கத்தில் அடைக்கப்பட்டன. பின், படிப்படியாக திறக்கப்பட்டன. குறிப்பாக, பொது இடங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் கடைகள் திறக்கவும், குறைந்த அளவிலான கடைகள் திறக்கப்பட்டு மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மீண்டும் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு தற்போது மளிகை மற்றும் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை ஆகியவைகள் மூடப்படுமா அல்லது நேரம் குறைக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால், மாவட்ட நிர்வாகம் கடைகள் எதுவும் மூடப்படாது, நேரம் குறைக்கப்படாது என தெரிவித்துள்ளது.

 நீலகிரி கலெக்டர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுக்களில் பெரும்பாலான வியாபாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால், பாதிப்பு அதிகம் வர வாய்ப்பில்லை. அதேபோல், மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகள் மூடப்படாது. வழக்கம் போல், இயங்கும்.

நேரமும் குறைக்கப்படாது. பொதுமக்கள் கூட்டமாக வந்து பொருட்கள் வாங்காமல் இருப்பதை வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், என்றார்.

Related Stories: