முககவசம் அணியாதவர்களிடம் ரூ.49 லட்சம் அபராதம் வசூல்

ஊட்டி,ஏப்.10: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றினால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது. முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடி வருகின்றனர். இதனிடையே தற்போது நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளது. இதனால் அபராத நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் படி வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனிடையே முக கவசம் அணியாமல் நடமாடியவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என இதுவரை நீலகிரி மாவட்டத்தில் ெமாத்தம் ரூ.49 லட்சத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>