நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

ஊட்டி,ஏப்.10: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய கொேரானா படிப்படியாக வேகம் எடுத்தது. 6 மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின், படிப்படியாக குறையத்துவங்கியது. அக்டோபர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பாதிப்பு குறைந்தே காணப்பட்டது. நீலகிரியில் அப்போதைய காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 முதல் 10 பேர் வரை மட்டுமே இருந்து வந்தது. ஆனால், தற்போது நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 பேர் வரையுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் தற்போது பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 முதல் 10 வரையில் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது  20 முதல் 30 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியில் வராமல்  தடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் போலீ்ஸ் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தன்னார்வலர்களை கொண்டு பொதுமக்களுக்கு ேதவையான பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் 155 நோயாளிகள் அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்ைச பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கோவிட் கேர் சென்டர்கள் துவக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தற்போது தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், அனைத்து பகுதிளிலும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், திரும்ப செல்லும் போது நெகடிவ் சான்றிதழ் கேட்கின்றனர். இதனை அரசு வழங்க இயலாது.

எனவே, அவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது லேப்களில் வாங்கிக் கொள்ள வேண்டும். முககவசம் அணியாதவர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதற்கு தொடர்ந்து இ பதிவு முறை தொடரும். கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் கட்டுப்பாடுகளுடனே நடத்தப்பட வேண்டும்.

அரசு பஸ்களில் அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும். நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை. கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Stories:

>