திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் நாளை மருத்துவ ஆலோசனை முகாம்

திருப்பூர், ஏப்.10: திருப்பூரில் அமைந்துள்ள ரேவதி மருத்துவமனையில் நாளை மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து  இம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாகடர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்,  ‘‘நாளை ரேவதி மருத்துவமனையில் நடக்கவுள்ள மருத்துவ ஆலோசனை முகாமிற்கு மூட்டு இணைப்புதிசு மற்றும் முடக்குவாத சிறப்பு மருத்துவரான சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் டாக்டர் ரமேஷ் வரவுள்ளார்.

இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. மூடக்குவாதம், முதுகுத்தண்டுவடம், நீண்டநாள் கை,கால் மூட்டு வலி உள்ளவர்கள், எலும்பு திண்மை நோய், நுரையீரல் பாதிப்பு, மூட்டு அலர்ஜி நோய்,  சொரியாட்டிக் ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்களால் அவதிப்படுகிறவர்கள் இந்த சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு 98422 09999 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்’’ என கூறினார்.

Related Stories:

>