திருப்பூரில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு

திருப்பூர், ஏப். 10:  திருப்பூர் ஓடக்காடு பகுதியில், நேற்று காலை தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், தொழில் துறையினர் அவதிக்குள்ளானார்கள்

திருப்பூரில் கடந்த சில நாட்களாக பல இடங்களில், அடிக்கடி அறிவிக்கபடாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் தொழில்துறையினர், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஓடக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 மணி அளவில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு, மதியம் 2.30 மணிக்கே சீரானது. இதனால் அப்பகுதியை சேர்ந்த தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்தடையால் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொழில்துறையினர் புகார் தெரிவித்தனர்.

Related Stories:

>