×

இலவச பச்சரிசி வழங்குவதற்கான அரசு உத்தரவு இதுவரை வரவில்லை

திருச்சி, ஏப்.10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை: முஸ்லிம்களில் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு கடமையை ரமலான் மாதம் முழுவதிலும் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பிலிருந்து கடமையை நிறைவேற்றுவர். சற்றொப்ப 15 மணி நேரம் உண்ணாமல், பருகாமல், விரதத்தை கடைப்பிடித்து நோன்புக்கஞ்சி அருந்தி விரதத்தை முடிப்பர். நோன்புக் கஞ்சிக்கு தேவையான விலையில்லா பச்சரிசி தமிழக அரசு வழங்கி வருகிறது. நடப்பாண்டு நோன்பு ஏப்ரல் 14ம் தேதி துவங்குகிறது.  இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் நோன்பு கஞ்சிக்கு தேவையான பச்சரிசியை தமிழக அரசு இதுவரை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை என்பதை பல பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர். காலதாமதத்துக்கு தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இருந்தது என்றாலும் தேர்தல் முடிந்து 4 நாட்கள் ஆகிவிட்டது. இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டியவர் தமிழக அரசின் தலைமை நிலைய செயலாளர். எனவே உரிய உத்தரவை தமிழக தலைமை செயலாளர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Tags :
× RELATED திருச்சியில் இன்று மின்தடை