×

இளம்பெண் கடத்தல்: வாலிபர் சிறையிலடைப்பு

திருவெறும்பூர் ஏப்.10: திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண் கடந்த 7ம் தேதி காலையில் பால் வாங்க வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. முன்னதாக தேர்தல் நாளான 6ம் தேதி மைனர் பெண்ணின் வீட்டருகே வசித்து வந்த கரண் என்ற வாலிபர் அவரை திருமணம் செய்துகொள்வதாக பெற்றோரிடம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்ட பெற்றோர், இதுகுறித்து திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் மாலையில் காட்டூர் அருகே ஆயில்மில் பஸ் நிறுத்தம் பகுதியில் மைனர் பெண்ணுடன் நின்றிருந்த கரணை போலீசார் கைது செய்து, கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திருச்சியில் இன்று மின்தடை