10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்தது. இதனைத் தொடர்ந்து 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க பாதுகாப்பு அறைகள் ஒதுக்கப்பட்டு அந்த அறையில் குறிக்கப்பட்ட வரிசையின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டது.பிறகு திருவள்ளுர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா, தேர்தல் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 10 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் 240 பேரும், தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீசார் 270 பேரும் மற்றும் போலீஸ் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 300 பேர் என  மொத்தம் 810 பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும், மீதமுள்ள 2 அடுக்கில் மாநில போலீசாரும் என மொத்தம் 3 அடுக்கு போலீஸ்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: