320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

குன்றத்தூர்: குன்றத்தூர் குட்கா விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 320 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.  குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, கடைகளில் பதுக்கி வைத்து  விற்பனை செய்வதாக குன்றத்தூர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்படி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு, எஸ்ஐஅந்தோணி சகாயபரத் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் பைக்கில் சென்ற ஒருவரை மடக்கி சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தை சேர்ந்த செல்வம் (42). அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார் என தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 320 கிலோ குட்கா பொருடக்ளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், செல்வம், பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, அதனை குன்றத்தூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை கைது செய்தனர்.

Related Stories: