அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல்

திருவள்ளூர்: அரக்கோணம் அடுத்த சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுணன் (20). செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா ( 25). இரண்டுபேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு கௌதம நகர் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர்.இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி திருவள்ளூர் உழவர் சந்தை அருகே மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.சி.சத்தியமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் கீழானூர் பகுஜன் பிரேம், மத்திய மாவட்டத் தலைவர் திருநின்றவூர் இரா.

அன்புச்செழியன், மாவட்ட பொருளாளர் ஜெய்பீம் செல்வம்,  வீரா விஜி, ஆனந்தன், சேலை சுரேஷ் தண்ணீர் குளம் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் வெற்றிவேந்தன், ராஜி, சுரேஷ், லோகேஷ், ராக்கெட் ராஜேஷ், டில்லி நாகராஜ், ரவிக்குமார், ஆனந்தராஜ், குலசிங்கம் ,காமராஜ் ,போட்டி உமாபதி, மதன் ,சரண், விக்னேஷ், வினோத், அன்பு, தமிழ் கவி, விதி வினோத், தியாகு உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் டிஎஸ்பி துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், கண்ணையா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: