வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு

தர்மபுரி. ஏப்.10: தர்மபுரி மாவட்டத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, முருங்கை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாத முதல்வாரத்தில், முருங்கை வரத்து குறைந்து, ஒரு கிலோ ₹120 முதல் ₹130 வரை விற்பனையானது. இந்நிலையில், உழவர் சந்தைக்கு முருங்கை வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், அதன் விலை படிப்படியாக சரிய துவங்கியது. இம்மாத முதல்வாரத்தில், ஒரு கிலோ முருங்கைக்காய் ₹70க்கு விற்பனையானது. தொடர்ந்து ₹60 எனவும், நேற்று ₹30எனவும், விலையில் சரிவு ஏற்பட்டது.

Related Stories: