காரிமங்கலத்தில் காட்சி பொருளான ஆர்.ஓ குடிநீர் திட்ட கட்டிடம்

காரிமங்கலம், ஏப்.10: காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ₹5லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆர்.ஓ குடிநீர் திட்ட கட்டிடம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.காரிமங்கலம் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் நலன் கருதி, அப்போதைய பாமக எம்பி.அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹5 லட்சம் மதிப்பில் ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் முழுமை பெறாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது இக்கட்டிடம் காட்சி பொருளாக மாறிவிட்டது. சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இப்பணியை முடித்து ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, கட்டிட பணியை விரைந்து முடித்து ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: