திருச்செங்கோட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தறி தொழிலாளி போக்சோவில் கைது

திருச்செங்கோடு, ஏப். 10: திருச்செங்கோட்டில் 15வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 32 வயது தறித்தொழிலாளியை, போக்சோ சட்டத்தி–்ன் கீழ்  போலீசார் நேற்று கைது செய்தனர்.திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, 10ம் வகுப்பு வரை படித்து விட்டு,  கொரோனா காலம் என்பதால், பள்ளிக்கு செல்லாமல், அங்குள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சமீப காலமாக சிறுமிக்கு அடிக்கடி  வயிற்று வலி ஏற்பட்டது.

இதுகுறித்து தனது தாயிடம் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து அவர், சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி கர்ப்பாமாக இருப்பதாக  தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் சிறுமியின் கர்ப்பத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளியான ஊமையன் (எ) மணி (38)  என்பவர் தான் காரணம் என்பது தெரியவந்தது. தவிர மணிக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது.  இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், தறித்தொழிலாளி மணியை நேற்று கைது செய்தனர்.

Related Stories:

>