பள்ளத்து கருப்பனார் கோயில் திருவிழா ரத்து

ராசிபுரம், ஏப். 10:  ராசிபுரம் தாசில்தாருக்கு, பள்ளத்து கருப்பனார் கோயில் நிர்வாகத்தினர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:ராசிபுரம் வட்டம் பட்டணம் பேரூராட்சி பசும்பனூர் காணி பட்டணம் பள்ளத்து கருப்பனார் கோயிலில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இரவு சிறப்பு பூஜை செய்து 10 ஆயிரம் கிடா வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து வழங்குவது வழக்கமாகும்.இந்தாண்டு திருவிழா நடைபெற இருந்த நிலையில், கொரோனா 2வது அலை காரணமாக, அரசு வழிகாட்டி நெறிமுறை காரணமாக, விழாவை ரத்து செய்வதாக கோயில் நிர்வாக பங்காளிகள் முடிவு செய்துள்ளோம். எனவே, இந்தாண்டு கருப்பனார் கோயில் திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>