தேர்தலில் பணம் வினியோகம் தடுக்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம் நாய்போல் நான்கு காலில் சென்றனர்

செய்யாறு, ஏப்.10: தேர்தலில் பணம் பிரதாணமாகுவதை தேர்தல் ஆணையம் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாய்போல் நான்கு காலில் குழைந்து சென்று விவசாயிகள் தூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு சப்- கலெக்டர் அலுவலகம் முன் நேற்று என்.எம்.ஆர் உழவர் பேரவை அமைப்பை சேர்ந்த 13 விவசாயிகள் நாய்போல் நான்கு காலில் சென்று மண்டியிட்டு கழுத்தில் டம்மி ரூபாய் நோட்டுகள் போட்டு முன்னே இருவர் இனிப்பு எடுத்துச்சென்று நாயை அழைப்பதைபோல் உச்சுகொட்டி அழைக்க பின்தொடரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு விடுமுறையுடன் ஊதியம் ₹273 வழங்கவும், என்.எம்.ஆர் வருகைப் பதிவேடு பதிவேற்றம் செய்து சம்பளம் வழங்க வேண்டும். தமிழகத்தில் வாக்களிக்காத 22 சதவிகிதம் பேர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது முன் மாதிரியாக ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைத்து தேர்தலை நடத்திடவும், தேர்தலில் பணம் வினியோகிப்பவர்களிடம் நாய்போல் நான்கு காலில் குழைந்து செல்வதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவை செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆர்டிஓ ந.விஜயராஜிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் மேலதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: