மக்களுக்கு மனநல விழிப்புணர்வு முக்கியம் கொரோனா வைரஸ் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளது அரசு மருத்துவர் பேச்சு

செய்யாறு, ஏப்.10:செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மருத்துவர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் வரவேற்றார். சுகாதார செவிலியர்கள் ஜி.கலைவாணி, புவனேஸ்வரி, சகாயமேரி, குஷ்பூ, நிர்மலா, வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மருத்துவர் ஈஸ்வரி பேசியதாவது:கடந்த 1950ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை கருப்பொருளாக கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட விஷயத்தை மையமாக வைத்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த வருடத்திற்கான கருப்பொருள் சிறந்த மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல் என்பதாகும். தற்போது உலகமே எதிர்கொண்டு வரும் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நமக்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று பதற்றத்தால் உணவு, வேலை, பொருளாதாரம், கல்வி போன்றவற்றை பலரும் இழந்திருந்தாலும்,காற்று சுற்றுச்சூழல், தண்ணீர் சுத்தம், உணவு பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அனைவருமே விழிப்புணர்வுடன் இருப்பதை நேர்மறையான முன்னேற்றம் என்று குறிப்பிடலாம். மேலும், மன ஆரோக்கியத்தை பொருத்தவரை தனி மனிதனின் மன உறுதியை அசைத்து பார்க்கும் சோதனை காலமாகவே நோய் தோற்று காலம் இருந்தது.

மன அழுத்தத்தை ஏற்படுத்துவதில் தொடங்கி தனி மனிதனின் ஆளுமையை சிதைப்பது போன்ற எதிர்மறை பாதிப்புகள் குடும்பம் சமூக உறவுகள் மற்றும் பணியிடங்கள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மன நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: