பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரில் குளோரின் கெமிக்கல் வயிறு எரிச்சல், தொண்டை வலி என குற்றச்சாட்டு காட்பாடியில் மாநகராட்சி சார்பில்

வேலூர், ஏப்.10:வேலூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் கெமிக்கல் கலப்பதால் வயிறு எரிச்சல், தொண்டை வலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் 60 வார்டுகள் உள்ளது. இந்த மாநகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் வாரத்திற்கு ஒருமுறையும், மற்ற இடங்களில் 4 நாட்களுக்கு பொதுமக்களுக்கு ஒருமுறையும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு சப்ளை செய்யப்படும் குடிநீரில் இதுவரை உப்பு கலந்த குளோரினுடன் சேர்த்து வீடுகளுக்கு சப்ளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கெமிக்கல் குளோரின் கலந்த குடிநீரை மாநகராட்சி விநியோகித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வயிறு எரிச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், அரசு சார்பில் கொடுத்த புதிய கெமிக்கல் குளோரின் தான் கலந்து குடிநீர் வினியோகம் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பல மாதங்களாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் உப்பு கலந்த குளோரின் வழங்குவார்கள். அதை குடிநீரில் கலந்து வழகப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக கெமிக்கல் கலந்த குளோரின் வழங்கி வருகிறது.மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் காரணமாக அந்த கெமிக்கல் குளோரின் வாங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பான புகார்கள் குறித்து ஆய்வு செய்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவே பழைய முறைப்படி உப்பு கலந்தகுடிநீரை வழங்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: