காப்புக்காட்டில் விடப்பட்டது குடியிருப்பு பகுதியில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

குடியாத்தம் ஏப்.10: குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கண்ணாடி விரியன் பாம்பு மீட்டு காப்பு காட்டில் விடப்பட்டது.குடியாத்தம் அடுத்த செதுகரை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வீட்டின் அருகே நேற்று காலை கண்ணாடி விரியன் பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரம் போராடி 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இதையடுத்து பாம்பை குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு வனவர்கள் கல்லப்பாடி காப்புக்காட்டில் உள்ள ஈஸ்வரன் கோட்டை பகுதியில் விட்டனர்.

Related Stories: