₹7 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

சென்னை, ஏப். 9: கும்மிடிப்பூண்டி அடுத்த குத்தானம்பேட்டில் உள்ள விவசாய பம்ப் ஷெட் ஒன்றில் குட்கா பொருடகளை பதுக்கி, சொகுசு கார் மூலம் எடுத்து சென்று பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனை நடத்திய போது, குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரிந்தது. அங்கிருந்து ₹ 7 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ  போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபத்சிங் (30) என்பவரை பிடித்து விசாரித்தபோது, இவர் கும்மிடிப்பூண்டியில் தங்கி கடைகளுக்கு குட்கா சப்ளை செய்வது தெரிந்தது. அவரை கைது செய்து குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது.  எதெந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் விநியோகம் செய்யப்படுகிறது என பல்வேறு கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: