சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை,ஏப்.9: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக தலைமை ெசயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மண்டலம் -1 மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், டி.ஆர்.ஓ. மகேஸ்வரன், உதவி போலீஸ் ஐ.ஜி.ராமகிருஷ்ணன், சிறப்புப் பணி அதிகாரி வடிவேலன், மண்டலம் -2 நகரமைப்பு இயக்குநர் கணேசன், டி.ஆர்.ஓ. மோகன்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார், எம்.எம்.சி. சேரன், மண்டலம்-3 டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மோகன், டி.ஆர்.ஓ. விஜயா, போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் கூடுதல் இயக்குநர் சேகர், மண்டலம் -4 டிட்கோ செயல் இயக்குநர் கார்த்திகேயன், டி.ஆர்.ஓ. முனுசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணி, தேசிய சுகாதார இயக்க கூடுதல் இயக்குநர் தேவபார்த்தசாரதி, மண்டலம் -5 டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், டி.ஆர்.ஓ. சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இணை இயக்குநர் ஜெரார்ட் மரியசெல்வம், மண்டலம் - 6 வணிக வரிகள் இணை கமிஷனர் நாரணவரே மனிஷ் சங்கர்ராவ், டி.ஆர்.ஓ. ராஜகிருபாகரன்,

துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இணை இயக்குநர் பவானி உமாதேவி,மண்டலம் -7 சிறுபான்மையினர் நலன் இயக்குநர் சுரேஷ்குமார், டி.ஆர்.ஓ. சுகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மேகலைனா ஐடன், தேசிய சுகாதார இயக்க இணை இயக்குநர் விஜயலட்சுமி, மண்டலம் -8 டி.என்.எஸ்.சி.பி. இணை மேலாண்மை இயக்குநர் கோபால சுந்தரராஜ், டி.ஆர்.ஓ. மணிமேகலை, போலீஸ் சூப்பிரண்டு ராமர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இணை இயக்குநர் கிருஷ்ண்ராஜ், மண்டலம் -9 தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், டி.ஆர்.ஓ. காளிதாஸ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரிதர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இணை இயக்குநர் சுரேஷ், மண்டலம் -10 டான்ஜெட்கோ இணை மேலாண்மை இயக்குநர் வினீத், டி.ஆர்.ஓ. ஆலின் சுனேஜா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தியாகராஜ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க இணை இயக்குநர் நாகராணி, மண்டலம் -11 சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குநர் பிரபுசங்கர், டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மைய முதல்வர் பானுமதி, மண்டலம் - 12 ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்மல்ராஜ், டி.ஆர்.ஓ. சாந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன்,

சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சாந்தி, மண்டலம் - 13 தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் சந்திரகலா, டி.ஆர்.ஓ. பரமேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜூ, தேசிய சுகாதார இயக்க துணை இயக்குநர் செந்தில்குமார், மண்டலம் - 14 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் முருகேஷ், டி.ஆர்.ஓ. கோவிந்தராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு வல்லவன், தமிழ்நாடு சுகாதார முறைகள் சீர்திருத்த திட்ட குழு தலைவர் பரணிதரன், மண்டலம் - 15 வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் வீரராகவ ராவ், டி.ஆர்.ஓ. பூவராகன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குநர் சதீஷ் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: