வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதி

திருப்பூர்,ஏப்.9: திருப்பூர் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி கல்லூரிக்கு வருபவர்களை போலீசார் கடுமையான சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற 2ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கலை கல்லூரியில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.  மேலும் அந்த அறைகள் உள்ள பகுதிக்கு ஆயுதம் ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எல்.ஆர்.ஜி கல்லூரிக்கு உள்ளே நுழையும் ஊழியர்கள், ஆசிரியர்கள், பூத் ஏஜெண்டுகள் ஆகியோரை போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் அவர்கள் உள்ளே செல்லும் நேரம் மற்றும் வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றையும் பதிவு செய்கின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு: அதே போல வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: