மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா

திருப்பூர்,ஏப்.9: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,155 ஆக உள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 93 ஆக உள்ளது. 834 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 228 ஆக உள்ளது. பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>