அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஊட்டி,ஏப்.9: ஊட்டி தீயணைப்பு நிலையம் சார்பில் ஊட்டி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நடந்தது. தமிழகத்தில்  மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நீலகிரி  மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.  இதனிடையே மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஒத்திகைகள் நடத்துமாறு  தீயணைப்புத்துைற இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இதன்  அடிப்படையில் ஊட்டி தீயணைப்பு நிலையம் சார்பில் ஊட்டி அரசு மருத்துவமனை  வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீ தடுப்பு ஒத்திகை  நடத்தப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு, மின் கசிவு போன்ற  காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்.  தீ விபத்தை தடுப்பது, எதிர்பாராத விதமாக ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது,  தீ அணைப்பானை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து செயல்முறை  விளக்கமளிக்கப்பட்டது.இதில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார்  தலைமையிலான வீரர்கள் பங்கேற்று விளக்கமளித்தனர். இதில் ஊட்டி அரசு  மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: