சூலூர் பெரிய குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சூலூர், ஏப். 9: சூலூர் பெரிய குளத்தில் மீன்கள் செத்துமிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சூலூர் பெரிய குளத்தில் மழைநீர் மற்றும் கோவை மாநகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சாக்கடை நீர் பெரியகுளத்தில் கலப்பதால் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளது. சாக்கடை நீர் மற்றும் ரசாயன கழிவு நீரால் குளத்தில் உள்ள  மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்கின்றது.செத்த மீன்கள் அப்புறப்படுத்த முடியாமல் ஆகாயத்தாமரைச் செடிகளின் ஊடே இருப்பதால் அழுகிய மீன்களின்  துர்நாற்றம் அதிகமாக  வீசுகின்றது. சூலூரில் இருந்து குளத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை மூடிச் செல்கின்றனர். மீன்கள்அழுகி மிதப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories: