வாக்கு எண்ணிக்கை மையங்களில் 128 சிசிடிவி கேமராக்கள் தீவிர கண்காணிப்பு

ஈரோடு, ஏப். 9: சித்தோடு, கோபி ஆகிய 2 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 128 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய தொகுதியில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி. பொறியியல் கல்லூரியிலும், கோபி மற்றும் பவானிசாகர் தொகுதியில் பதிவான இயந்திரங்கள் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வளாகத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில், தொகுதி வாரியாக, இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட அறையில் உள்ளன.

ஒவ்வொரு தொகுதிக்கான அறைக்கும், 8 அலுவலர்கள் வீதம் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சித்தோடு கல்லுாரி வளாகத்தில், 96 சி.சி.டி.வி. கேமராக்களும், கோபி கலை அறிவியல் கல்லுாரியில் 32 சி.சி.டி.வி. கேமராக்களும் கண்காணிப்பில் உள்ளன. இந்த 128 சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தலா 8 வீதம் 16 எல்.இ.டி. தொலைக்காட்சி மூலம் கண்காணிக்கிறோம். துணை ராணுவத்தினர், போலீசார் என 300க்கும் மேற்பட்டோர் அவ்வளாகத்தில் பாதுகாப்பில் உள்ளனர்.

கோபி கல்லுாரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Stories: