கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு, ஏப். 9:  ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆண், பெண்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் டேலி பயிற்சி வழங்கப்படுகிறது. வருகிற 15ம் தேதி முதல், மே 21ம் தேதி வரை, வார விடுமுறை நீங்கலாக, 30 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு போன்றவை இலவசம். பயிற்சி நிறைவில், சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கிராமப்புறத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் பயிற்சி பெறலாம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்கள், அவர்களது குடும்பத்தினர் பயிற்சி பெறலாம். இப்பயிற்சி, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு 638 002, என்ற முகவரியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: