எலச்சிபாளையம் ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

திருச்செங்கோடு, ஏப்.9: எலச்சிபளையம் ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மோளியபள்ளி வண்ணாங்காடு பகுதியில், ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதானதால், மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் மோளியபள்ளி வண்ணாங்காடு பகுதியில், 30க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னேடு என்ற இடத்திற்கு சென்று, அங்குள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்து பொதுமக்கள்  பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய ஆணையாளர்  ஆகியோரிடம், குடிநீர் வழங்கக்கோரி பலமுறை கோரியும்,  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2018-19ம்  ஆண்டில் ஊராட்சி  ஒன்றிய பொது நிதியில் இருந்து மினி டேங்க் அமைக்கப்பட்டது.  அதன்மூலம், பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார்  பழுதடைந்ததால், குடிநீருக்கு வேறு எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  குடிநீரின்றி சிரமப்பட்டு வரும் தங்களுக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில், அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி, எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என, அப்பகுதி பொதுமக்கள்  அறிவித்துள்ளனர்.

Related Stories:

>