தன்னார்வலர்களுக்கு தீத்தடுப்பு செயல்விளக்கம்

நாமக்கல், ஏப்.9: நாமக்கல்லில் தன்னார்வலர்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்டத்தில் வனப்பகுதிகளில் தீப்பிடித்தால், அவற்றை அணைக்கும் பணியில் எப்படி ஈடுபட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது. உதவி மாவட்ட அலுவலர் தவமணி, நாமக்கல் நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் ஆகியோர், கோடை காலங்களில் ஏற்படும் வனத்தீயை தடுக்கும் முறைகள், பல்வகை தீ விபத்துகளை தடுப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.கோடையில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மலைப்பகுதிகளிலும், வனப்பகுதியில் சருகுகள் தீப்பிடித்து எரிகிறது. அவற்றை கட்டுபடுத்துவது குறுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். ராசிபுரம் : ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில், தனியார் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் பல்வேறு தீ தடுப்பு குறித்த பயிற்சிகள் செய்து காட்டப்பட்டது. இதில் தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர். எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும், தீ விபத்தின் போது தீயை அணைக்கும் விதம் குறித்தும், நோயாளிகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது பற்றி தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனா்.திருச்செங்கோடு:  திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  பாதுகாப்பது பற்றி, தீயணைப்பு நிலைய  அலுவலர் குணசேகரன் மற்றும்  பணியாளர்கள் செயல் விளக்கம் செய்துகாட்டினர்.குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி, நகர்புற சுகாதார அலுவலர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. தீயணைப்பு துறை அலுவலர் கிருஷ்ணகுமார் பங்கேற்று, ஆபத்தான நேரத்தில் தீயிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விளக்கமளித்தார். இதில்  ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>