சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம், ஏப். 9:  விருத்தாசலம் செல்வராஜ் நகர் நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர், தனது மனைவியுடன் விஜயமாநகரம் கோயில் திருவிழாவில் வியாபாரம் செய்வதற்கு தங்களது 17 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டனர். பின்னர் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெண்ணை காணவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குப்பன் (25) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்ததையடுத்து, பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், குப்பன் மீது விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>