கொரோனா எதிர்ப்பு சக்தி கண்டறிய 30 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்

செய்யாறு, ஏப்.9: செய்யாறு அருகே நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 30 பேரிடம் நேற்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மனிதனுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இரண்டு கிராமங்கள் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கிராமப் பகுதியில் வசிக்கின்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என பொதுவாக ரேண்டமாக தேர்வு செய்யப்பட்டு அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி செய்யாறு சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பில் நேற்று சடத்தாங்கல் கிராமத்தில் வட்டார மருத்துவர் ஏ.சி.சர்மிளா மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர், சுகாதார செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் கொண்ட குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

இந்த மாதிரிகளில் நோய் எதிர்ப்பு சக்தி கூடியுல்லதா அல்லது குறைந்துள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளாகும். சேலத்தில் உள்ள ரத்த ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக ரேண்டமாக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை கொண்டு அடுத்தகட்ட ஆராய்ச்சிக்காக கொரோனாவை தடுப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கும் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கும் இந்த ஆராய்ச்சி பயன்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்திருந்தனர்.

Related Stories: