மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு ஆரணி அருகே

ஆரணி, ஏப்.9: ஆரணி அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(38), நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் நேற்று முன்தினம் துந்தரீகம்பட்டு விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து சடலத்தை மீட்டனர். அதன்பிறகு நடத்திய விசாரணையில், 3 நாட்களுக்கு முன்பு மாயமான ராமதாஸ் என தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மாயமான ராமதாசுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதாகவும், கடந்த 8ம் தேதி மது குடித்துவிட்டு பைக்கில் வந்தபோது பைக்குடன் நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராமதாசுக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒருமகன், ஒரு மகள் உள்ளனர்.

Related Stories: