டாஸ்மாக், அசைவ ஓட்டல்களில் குவிந்த மதுப்பிரியர்கள் கலசபாக்கத்தில் விற்பனை படுஜோர் மதுக்கடைகள் 3 நாள் விடுமுறை எதிரொலி

கலசபாக்கம், ஏப்.8: கலசபாக்கம் பகுதிகளில் டாஸ்மாக் மற்றும் அசைவ ஓட்டல்களில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அரசியல் கட்சியினர் வேட்பாளர் பட்டியல்களை அறிவித்தவுடன் வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை சேர்பதற்காக பணம் கொடுத்து பொதுமக்களை வாகனங்களில் அழைத்து வந்து கூட்டத்தை சேர்த்தனர்.

மேலும், தினந்தோறும் வாக்கு சேகரிப்பதற்காக கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு டோக்கன்கள் வழங்கி உரிய சன்மானம் வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால், மதுப்பிரியர்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதலாக மதுபானங்களை பெற்று இருப்பு வைத்தனர். இதன்காரணமாக ஒரே நாளில் நான்கு மடங்கு மதுபானங்கள் விற்பனையாகின.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்ததால், நேற்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதனால், ஏராளமான மதுப்பிரியர்கள் மதுபானக் கடைகளிலும், அசைவ ஓட்டல்களிலும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு பிறகும் அலைமோதிய மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம்அதிகமாக இருந்தது.

Related Stories: