₹30 லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

விருத்தாசலம் அருகே

ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட

விருத்தாசலம், மார்ச் 5:  விருத்தாசலம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.30 லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், விருத்தாசலம் அடுத்த  வேப்பூர் கூட்ரோட்டில், நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கணேசன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் ஆவணமின்றி தட்டுகள், காமாட்சி அம்மன் விளக்குகள், கைச்செயின்கள், கொலுசுகள் உள்ளிட்ட 1,732 எண்ணிக்கையிலான சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 48 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்களை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் கும்பகோணத்தை சேர்ந்த சசிகுமார் என்றும், அவர் நகைக்கடை வைத்திருப்பதால் சேலத்தில் இருந்து வாங்கி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணமின்றி பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதால், அவற்றை  பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் விருத்தாசலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வெள்ளி பொருட்களை எடை வைத்த பின்பு பெட்டியில் சீல் வைத்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: