×

ஆண்டிமடத்தில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

ஜெயங்கொண்டம், மார்ச் 18: ஆண்டிமடம் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆண்டிமடம் வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 10 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கு தலா 2 முக கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மக்களும் முக கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ஆண்டிமடம் கிராம வணிகர் நலச்சங்கத்தின் தலைவர் மோகன், செயலாளர் சின்னப்பராஜ், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர்களுடன் அனைத்து வணிகர்களும் அவசியம் முக கவசம் அணிந்து வியபாரம் செய்ய வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களை முக கவசம் அணிந்து வர சொல்ல வேண்டும் என்று கூறி ஆண்டிமடம் கடைவீதியில் இலவசமாக முக கவசம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது