×

தாசில்தார் நடவடிக்கை அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் திருமானூர் பகுதியில் வாக்கு சேகரிப்பு

அரியலூர், மார்ச் 18: அரியலூர் தொகுதிக்குட்பட்ட திருமானூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் 2வது நாளாக நேற்று வாக்கு சேகரித்தார். இந்த ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண் வங்கிகளில் கடன் பெற்று வந்த 5 ஆயிரம் விவசாயிகளின் ரூ.20 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்பட அதிமுகவுக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சேனாபதி முடிகொண்டான், பாளையபாடி, திருமானூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று தாமரை ராஜேந்திரன் ஓட்டு சேகரித்தார். இந்த பிரசார பயணத்தில் அரசு கொறடா, அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி, பாமக மாவட்ட தலைவர் குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் வடிவழகன், பாஜக ஐயாறப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இன்று (18ம் தேதி) அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் அரியலூர் தெற்கு ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி காலை 8 மணிக்கு பொய்யூரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.  தொடர்ந்து செம்மந்தன்குடி, மேலக்கருப்பூர், கருவிடைக்குறிச்சி, பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்து மதியம் 2 மணிக்கு வாழைக்குழியில் முடிக்கிறார். பின்னர் பு.ஒட்டக்கோவிலில் துவங்கி ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு இரவு 8 மணிக்கு வி.கைகாட்டியில் முடிக்கிறார்.

Tags : AIADMK ,Ariyalur ,Thirumanoor ,
× RELATED அரியலூர் அருகே பெண்ணுக்கு மருத்துவம்...